மகேந்திர சிங் தோனி, சுருக்கமாக எம் எஸ் தோனி என்று அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார்.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதை இரண்டு முறை பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் இந்திய குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது, 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மூன்றாவது விருதான பத்ம பூசண் உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார்.
2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விசுடனின் முதலாவது கனவு தேர்வு XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருந்தார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது.அதன் பின்னர் இதுவரை இந்திய அணி உலக கோப்பையை வெல்லவில்லை.
தோனி பீகார், ராஞ்சியில், (இப்போது ஜார்க்கண்ட்) பிறந்தார். இவர் பான் சிங் மற்றும் தேவகி தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவர் ஆவார். இவரது பெற்றோர் உத்தரகாண்டிலிருந்து ராஞ்சிக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை சார்க்கண்டிலுள்ள மெகன் காலணி நிறுவனத்தில் குழாய் செய்குநராக பணியாற்றினார்.
தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் முதல் பருவ ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது தலைமையின் கீழ், 2010, 2011, 2018 மற்றும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களையும், 2010 மற்றும் 2014 சாம்பியன்ஸ் லீக் இ20 பட்டங்களையும் வென்றது மற்றும் 2008, 2012, 2013, 2019 பருவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. நன்றி விக்கிப்பீடியா
இவர் சாக்ஷி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ziya என்ற பெண் குழந்தை உள்ளது.இவரின் சகோதரியின் பெயர் Jayanti Gupta சகோதரர் Narendra Singh Dhoni இவரின் குடும்ப புகைப்படங்கள் இதோ..