சிவராத்திரி போது தலைவர் G.P முத்து செய்த சேட்டை.. தலைவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பா..யார் கூட போயிருக்காரு பாருங்க..!

news

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டிக் டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயல்களில் வீடியோ பகிர்ந்து வந்தார் இவரின் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் பலரும் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அடைப்பை வருவதையும் அதனை அவர் பிரிக்கும் போது எடுக்கும் வீடியோக்களும் வைரலாகி வரும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அது மட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஜக்கி வாசுதேவியின் ஈசா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி இந்த வருடம் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார் சினிமா பிரபலங்கள் மற்றும் இசை கலைஞர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர் அதில் ஜி பி முத்துவும் கலந்து கொண்ட நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் இருக்கும் புகைப்படத்தையும் நடிகை ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஜி பி முத்து பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.நன்றி tamizstar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *