வியட்நாம் பெண் ஒருவரை காதலித்து கரம்பிடித்திருக்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த தம்பதிக்கு நெட்டிசன்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்காதலுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பது கிடையாது மொழி தேசம் என அத்தனை பாகுபாடுகளையும் தகர்க்கும் காதல் தான் உலக மக்களையும் ஒன்றிணைக்கிறது.
உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதும் பலதரப்பட்ட மக்களை சந்திப்பதும் தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது அதுவே சிலரது வாழ்க்கையில் காதலுக்கான பாதையாகவும் மாறிவிடும் அப்படியானவர்களில் ஒருவர் தான் நெல்லை மாவட்டதை சேர்ந்த தாமஸ் பிரபு இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் நவரத்தினம் தம்பதியின் மகன் தாமஸ் பிரபு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு கடந்த 9 வருடங்களாக பிரபு ஜப்பானில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் பகுதி நேரமாக தனது பிஎச்டி ஆய்விலும் பிரபு ஈடுபட்டு வருகிறார் இந்த சூழ்நிலையில் ஜப்பானில் அவருடைய பணிபுரியும் பாபாம்துய் ட்சுக் வான் எனும் பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது.
நட்பாக இருவரும் பழகிவந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது இந்நிலையில் இருவரும் தங்களது காதல் குறித்து தங்களது வீட்டினரிடம் பேசியிருக்கின்றனர் அப்போது இருவரின் பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அதன்படி கடந்த 12 ஆம் தேதி தாமஸ் பிரபு பாபாம் துய்ட்சுக் வான்ன் தம்பதி ஜப்பானில் கி றிஸ் துவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து தாமஸ் பிரபுவின் சொந்த ஊரான கூடங்குளத்தில் திருமண வரவேற்பு விழாவும் நடைபெற்றிருக்கிறது.
அப்போது மாப்பிள்ளையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர் இதுபற்றி பிரபுவின் தந்தை செல்வராஜ் பேசுகையில் தமிழகம் வியட்நாம் இடையே பண்டைய காலம் தொட்டே உறவு இருந்துள்ளது அம்மக்கள் தமிழ்நாடு மீது பாசம் வைத்துள்ளார்கள் அதன் எடுத்துக்கட்டாகவே இருவரின் திருமணமும் நடைபெற்றிருக்கிறது.நன்றி tamizstar