பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதில் வாரம் வாரம் எ லிமி னே ஷன் நடைபெறும். அதில் ஒரு நபர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணன் மற்றும் சீரியல் நடிகர் என்ற அடையாளத்தோடு கலந்து கொண்டவர் மணிகண்டா ராஜேஷ். இவர் அவள் என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர்.
அதுமட்டுமின்றி அடுத்தடுத்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு போன்ற சீரியல்கள் நடித்துள்ளார். இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த மணிகண்டா ஒரு நாளைக்கு ரூ. 18 முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பளம் பற்றிய தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…