சிறந்த பாடகர் “பென்னி தயாள்” அவர்கள் மே மாதம் 13 ஆம் தேதி 1984 ஆண்டு “என்பவர்” என்ற திரைப்படப் பின்னணிப் பாடகர்ஆனார்.அதற்கு முன்பு கோரோசக பாடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் மிக்க வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல் படித்துவந்த காலத்தில் “எஸ்5” என்ற ஓர் பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.
தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களைப் பாடியவர் பென்னி தயாள். மேலும் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ட்ரோன் கேமரா பென்னி தயாள் தலையில் இ டித்துள்ளது. இதில் தலையின் பின் பகுதியில் கா யம் ஏற்பட்டுள்ளது. மேலும் இ ரண்டு வி ரல்களிலும் ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “காயங்கள் இப்போது பரவாயில்லை. இதிலிருந்து மிக வேகமாக மீண்டு வருவேன் என்று நினைக்கிறேன். நான் மூன்று விஷயங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். முதலில் அனைத்து பாடகர்களும் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது ட்ரோன் கேமரா அருகில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் அசைவிற்கும் ட்ரோன் கேமரா இயக்கும் நபருக்கும் ஒரு புரிதல் இருக்காது. ட்ரோன் ஆப்பரேட் செய்யும் ஒருவரை கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.
தயவு செய்து அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் ஆபரேட்டரை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் இது மிகவும் ஆபத்தானது. நாங்கள் வெறும் பாடகர்கள். நாங்கள் மேடையில் பாடுகிறோம் அவ்வளவு தான். நாங்கள் ஸ்டண்ட் செய்ய விஜய், அஜித், சல்மான் கான் அல்லது பிரபாஸ் போன்ற ஹீரோக்கள் அல்ல. அதனால் நேரலை நிகழ்ச்சியின் போது ட்ரோன்கள் பாடகருக்கு மிக அருகில் வரக்கூடாது” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.நன்றி நக்கீரன்.
View this post on Instagram