அனைத்திலும் வெற்றி கண்ட டாடா – 86 வயதில் சரிந்த இமயம், கடைசியாக வெளியிட்ட சொந்த பதிவில் அவரின் நம்பிக்கையை பாருங்க..

news

86 வயதாகும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் எளிமையான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார்.இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி பதிவு:

ரத்தன் டாட்டா மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி , “ தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்” என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாடா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடலநல குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் வெறும் பரிசோதனைக்கு மட்டும் அவரது பதிவின் மூலமாக கிடைத்த தகவல்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட ரத்தன் டாட்டா, “ தனது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது. கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன்.. வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன்..” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே,அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என் தெரிகிறது மேலும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியன.இந்த நிலையில் தற்போது இறப்பு செய்தி வெளியாகி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விருதுகள்:

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கு எல்லாம் சாதனைகளாகவே முடிந்தது.86 வயதில் சரிந்த இமயம், கடைசியாக வெளியிட்ட சொந்த பதிவில் அவரின் நம்பிக்கையை பாருங்க.

“This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *